
திமுக அரசு, ஒரு உருட்டு அல்வா கடை, இங்கு உருட்டு அல்வாதான் கிடைக்கும் என்று கூறி, திமுகவின் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட காலி அல்வா பாக்கெட்டுகளை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சரியாக கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளியின்போதுதான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 525 அறிப்புகள் என்ற பெயரில் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதில், 10 சதவிகித அறிவிப்பைக்கூட அவர் நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் என்று கூறி, திமுக உருட்டு கடை அல்வா என்ற பெயரில் காலி பாக்கெட்டுகளை எடுத்துக் காட்டினார்.
அவருடன் இருந்த அதிமுகவினரும் கையில் இந்த காலி பாக்கெட்டுகளைக் காட்டினர். அதனை பத்திரிகையாளர்கள் கேட்டதும், எல்லாருக்கும் கொடுங்கள் என்று சொல்லி, பத்திரிகையாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமியே அந்த காலி பாக்கெட்டுகளை வழங்கினார். இதில், திமுக அளித்த வாக்குறுதிகள் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தால் சற்று நேரம் பேரவைக்கு வெளியே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.