
ஊர்கள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்குவது குறித்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
ஊர்கள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறு பெயரிடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, மறுபெயரிடுவது தொடர்பாக மக்களின் கருத்துகளை மதிப்பாய்வு செய்து, கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத் தன்மையின் அடிப்படையில் மறுபெயரிடுதல் பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இறுதிசெய்யப்பட்ட பெயர்களை மாற்றம் செய்வதற்கான பணிகளை நவம்பர் 11 ஆம் தேதிக்குள் முடித்து, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதனிடையே, சாதிப் பெயர் மாற்றம் குறித்த அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சாதிப் பெயர்களை நீக்கும் முடிவுக்கு பாராட்டு தெரிவித்த மதுரை அமர்வு, சாதிப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இருப்பினும், சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து கருத்துக் கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதியளித்ததுடன், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பத்துக்கு என்ன முடிவு? என்று தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதையும் படிக்க: திமுக உருட்டு கடை! காலி அல்வா பாக்கெட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.