
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களால் மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் இன்று(அக். 17) முதல் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதற்காக தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை தமிழகம் முழுவதும் இயக்கி வருகிறது.
பேருந்து, ரயில்கள், டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்து வருகிறார்கள்.
மதுரையில் இருந்து இன்றே ஆயிரக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி - பாண்டி கோவில், கோரிப்பாளையம் - சிம்மக்கல், தெற்கு வாசல் - மாநகர வழி சாலை என அனைத்துப் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசல் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் பாண்டி கோவில் வரை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.
இதையும் படிக்க: காதல் தியாகம்! இது GEN Z EDITION! DUDE: திரை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.