

தீபாவளித் திருநாளையொட்டி, அரசுப் பேருந்துகளில் இருநாள்களில் 3.5 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
தீபாவளித் திருநாளையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களால் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (அக். 16, 17) ஆகிய இரு நாள்களில் மட்டும் 3.5 லட்சம் பேர் பயணித்ததாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், ``தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் வெள்ளிக்கிழமை (அக். 17) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 1,975 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மேலும், வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரையில் 6,920 பேருந்துகளில் 3,59,840 பயணிகள் பயணித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.