

தீபாவளியையொட்டி 3 நாள்களாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிறபகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வோரின் வசதிக்காக 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று இரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் இயக்கப்பட்ட 4,926 பேருந்துகள் மூலம் 2.56 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
மேலும் சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து அரசுப் பேருந்துகளில் பயணிக்க 3.59 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.