வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: மு.க. ஸ்டாலின்

சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டது குறித்து...
அவசரகால செயல்பாட்டு மையத்தில்  ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 19) ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, மக்கள் அளிக்கும் புகார்களுக்கு எவ்விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை உள்பட எவ்வித மழையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது.

தேனி, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்துள்ளது. இங்கு கனமழையால் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. காவிரிப் படுகை டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் கூறுகிறார். அவர் தவறான செய்தியை பரப்பி வருகிறார் என முதல்வர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | 22% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்!

Summary

Government ready to face Northeast monsoon: M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com