
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நந்தம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, மீனம்பாக்கம், போரூர், வேளச்சேரி, நீலாங்கரை, பெரும்பாக்கம், வளசரவாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.