
கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழுவதுமே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் வலுவடைந்து காணப்படுகிறது.
இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலடுதுறை, திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.