
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர் மழை பெய்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதைத் தடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கனமழை: 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.