சென்னை, புறநகரில் பரவலாக கனமழை!

சென்னை, புறநகரில் பெய்து வரும் கனமழை தொடர்பாக...
மழை (கோப்புப்படம்)
மழை (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை, புறநகரில் கனமழை பெய்து வருகிறது.

எழும்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்கிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Summary

Rain in chennai and suburbans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com