
ஆம்பூர்: ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை வரை விடிய விடிய கனமழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.
நாயக்கனேரி, பனங்காட்டேரி உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால், ரெட்டி தோப்பு ஆனைமடுகு நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பி மாங்காய் தோப்பு கே.எம். நகர் பகுதிகள் வழியாக பாலாற்றில் கலக்கிறது.
இந்நிலையில், நதிசீலாபுரம் செல்லும் கானாற்றில் தரை பாலத்திற்கு மேலே வெள்ளம் செல்வதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், தோல் தொழிற்சாலை மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் மிகவும் அவதிக்குளகினர்.
மேலும், ரெட்டித் தோப்பு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதிக்கு செல்வதற்கான வழி மூடப்பட்ட நிலையில், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நகர காவல் துறை போலீஸாரும் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.