தமிழகத்தில் வருகிற அக். 27 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வருகிற 27 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி அக். 27 ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று(அக். 24) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை(அக். 25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக். 26 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும்
அக். 28 ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுங்கு மட்டும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.