

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தொல்காப்பிய பூங்கா ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரத்யேக வாகனத்தில் மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர், பூங்காவைச் சுற்றிப் பார்த்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக கலைஞரால் உருவாக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவுக்கு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்திருக்கிறது நமது திமுக அரசு.
உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் இத்தகைய பசும் போர்வைகளால் சென்னையை அலங்கரிப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அக். 27ல் சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.