வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகிலுள்ள வரக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஈஸ்வரமூர்த்தி (41). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வட்டித் தொழில் செய்து வந்தார். வெள்ளக்கோவில் பகுதியில் இடம், நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி பெங்களூரு செல்வதற்காக சனிக்கிழமை இரவு பேருந்துக்காக வெள்ளக்கோவில் புறப்பட்டுள்ளார். அவரும், அவருடைய தந்தை இருவரும் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் சென்றுள்ளனர்.
வரக்காளிபாளையம் அருகே வள்ளியிரச்சல் சாலை பிரிவில் பின்னால் வந்த டாடா சுமோ கார் இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த தந்தை, மகன் இருவரையும் காரில் வந்த கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டதாகத் தெரிகிறது.
பின்னர் அவ்வழியே வந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஈஸ்வரமூர்த்தி உயிரிழந்தார். அவருடைய தந்தை சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நிலத் தகராறில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Finance company owner murdered near Vellakovil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டீ கடை உரிமையாளரைத் தாக்கிய நிதி நிறுவன ஊழியா்கள் 5 போ் கைது

பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்
சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
போளூா் அருகே 57 வயது பெண் குத்திக்கொலை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



