

ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லையில் இன்று அவர் அளித்த பேட்டியில், மத்திய அரசின் ஆய்வு குழு இந்த முறையாவது மாநில அரசு கேட்கும் நிவாரணத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிவாரணம் கிள்ளிக் கொடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை இல்லை. விவசாயிகளின் துன்பத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத வகையில் நிவாரணத்தை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் உண்மையிலேயே உதவி செய்யக்கூடிய எண்ணத்தோடு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பிகார் தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம். ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பு. வெல்லும் என நம்பிக்கையோடு காத்திப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.