

எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், 'திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்' என்று முதல்வர் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
"இன்றைய சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக பிரிந்து கிடக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் சண்டை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குத்(திமுக) தானே வாய்ப்பிருக்கிறது. அது கண்கூடாகவே தெரிகிறது.
திமுகவுக்கு வரும் தேர்தலில் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது ஏன்? எப்படி? என்றும் பேச வேண்டும்.
எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வாய்ப்பிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் பேசவில்லை" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.