

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகா நதி அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முக நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
பருவமழை காலங்களில் தேங்கும் மழை நீரைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பது வழக்கம்.
அதன்படி வடகிழக்கு பருவமடையால் கடந்த அக். 18 ஆம் தேதி அணையின் முழு கொள்ளளவு 52.55 அடியே எட்டியது.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 3 கன அடி வீதம் நீர் உபரி நீராக வெளியேறி வருகிறது.
இதனை அடுத்து சண்முக நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது தலைமையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் மூலமாக ராயப்பன்பட்டி, ஆனைமலைபட்டி , எரசை, அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி மற்றும் ஓடைப்பட்டி வரையில் 1,680 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வினாடிக்கு 14.47 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, உத்தமபாளையம் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.