அதிமுகவின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். தான், நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை கட்சி அலுவலகத்தில் நாளை பேசுகிறேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்கி, கட்சிப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்தார். தற்போது அதிமுகவிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, செங்கோட்டையனிடம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்.க, நாளை காலை 11 மணிக்கு தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விரிவாகப் பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக, கட்சியிலிருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று நேற்று செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, கட்சியிலிருந்து நீக்கினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பசும்பொன்னில் நேற்று, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், அதிமுகவிலிருந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ செங்கோட்டையனை, இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Summary
Sengottaiyan said he will speak tomorrow about his removal from the AIADMK.
இதையும் படிக்க... அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி நில மோசடி விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது விரைவில் தெரியும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்களுக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும்: திண்டுக்கல் சி. சீனிவாசன்

அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்! தவெகவில் இணைகிறாரா?

கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்! சி. விஜயபாஸ்கர்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



