
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்; மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வானிலை சாதகம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப். 7 ஆம் வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.