திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(செப்.9) நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப். 9 ஆம் தேதி(செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக முப்பெரும் விழா குறித்தும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.