தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

திமுக அரசு மீது தவெக தலைவர் விஜய்யின் கண்டனம் தொடர்பாக...
தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.
Published on
Updated on
2 min read

ஆளும் திமுக அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செப்டம்பா் 13-ஆம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 6-ஆம் திருச்சிக்கு வந்தார்.

இதையடுத்து, திருச்சி விமான நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் புஸ்ஸி ஆனந்த் தரிசனம் செய்துள்ளார். அப்போது, சாலையில் அதிக கார்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.

அனுமதியின்றி கூட்டம் கூடுதல், சாலையோரத்தில் கார்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், போலீஸாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாநகா் மாவட்டத் தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி விமான நிலையப் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனத்தை, தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் மீதும், கட்சியினர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.

தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தவெகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் தவெகவினர் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

tvk leader Vijay has criticized the ruling DMK government, saying that it is at the height of fear after seeing the tvk

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com