

மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த முக்கிய நிர்வாகியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 9) கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் 10 நாள் அவகாசம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் அதிமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கோவையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இபிஎஸ், செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், ஹரித்துவார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.