விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
Published on
Updated on
1 min read

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, விராலிமலை சுற்றுப்பகுதி தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளைக் குறிவைத்து தெருநாய்கள் சுற்றிவருகின்றன.

இவ்வாறாக சுற்றித்திரியும் நாய்கள் ஒருசில நேரங்களில் சிறுவர்கள், பாதசாரிகளை கடித்து விடுகின்றன, சில நாய்கள் வாகனத்தில் செல்வோரை விரட்டி செல்கினறன. நாய் கடித்துவிட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாய் கடித்து மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

இதன்காரணமாக, விராலிமலை ஊராட்சி மன்றம் மற்றும் கால்நடை துறை இணைந்து தெரு நாய்களுக்கு இன்று(செப். 9) ரேபீஸ் தடு்ப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக சிதம்பரம் கார்டன், முத்து நகர், தேரடி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20 நாய்களை ஊராட்சி பணியாளர்கள் மூலம் வலை வைத்து பிடித்து, விராலிமலை கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வரும் நாள்களில் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று விராலிமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rabies vaccination work has begun in Viralimalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com