
காஞ்சிபுரத்தில் 4,997 பயனாளிகளுக்கு ரூ. 254 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 4,997 பயனாளிகளுக்கு ரூ. 254 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
விழாவில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
இதையும் படிக்க: தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.