கிருஷ்ணகிரி: 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டா - முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
கிருஷ்ணகிரியில் புதிய திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்
கிருஷ்ணகிரியில் புதிய திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கார் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டிருந்த மனைகள் காரணமாக, அங்குள்ள மக்கள் யாரும் கணினி பட்டா பெற முடியாமல், தங்கள் மனையை வாரிசுகளுக்கு மாற்றவோ, அடமானம் வைத்து வீடு கட்டவோ, விற்கவோ இயலாமல் நீண்டநாள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், சர்க்கார் புறம்போக்கு வகைப்பாடு என இருந்ததை 'ரயத்துவாரி நத்தம் மனை' என மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரியில் சுமார் 3,500 பேருக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒசூர் நகரிலும் சுமார் 8,150 பயனாளிகள் பல ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் இருந்தனர். இப்போது அவர்களுக்கும் வகைப்பாடு மாற்றி கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரப் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் வசித்து வந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

இதுவரை இலவச வீட்டுமனை பட்டா என்பது ஊரகப் பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கிருஷ்ணகிரியில் நகரத்தில் 1,802 பேருக்கும், ஒசூர் நகரத்தில் 3,222 பேருக்கும் முறையாக வரைமுறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5,154 வீட்டுமனை பட்டாக்களும், ரயத்துமனையாக மாற்றம் செய்யப்பட்ட 8,811 பட்டாக்களும், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 11,174 பட்டாக்கள், நகர நில வரித்திட்டத்தில் 13,073 பட்டாக்கள், நத்தம் வீட்டுமனை 39,533 பட்டாக்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினர் இணையவழி 6,425 பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் 1,240 பட்டாக்கள், வனஉரிமைச் சட்டம் 2006-இன்படி 301 பட்டாக்கள் என மொத்தம் 85,711 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுவதாக அவர் பேசினார்.

அப்போது, அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், கோபிநாத் எம்பி, எம்எல்ஏக்கள் தே. மதியழகன் (பர்கூர்) , ஒய் பிரகாஷ் (ஒசூர்), டி.ராமசந்திரன்(தளி) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க: செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி செப். 16-ல் தில்லி பயணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com