
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்க கொடியை காரில் பொருத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் கடந்த வாரம் அறிவித்தார்.
தொடர்ந்து, அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.