சர்வதேச நகரம்!
சர்வதேச நகரம்! (படம் | ENS)

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் கொண்ட அந்த பட்ஜெட்டில், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

சென்னை, தில்லி, மும்பை, புணே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் குறைக்கும் நோக்கில் துணை நகரங்கள் உருவாக்கப்படுகின்றன.

அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்களை அடையாளம் கண்ட ஆய்வு நிறுவனங்கள் டிட்கோவுக்கு அறிக்கை சமர்ப்பித்தன.

அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்(டிட்கோ) டெண்டர் கோரியுள்ளது.

Summary

TIDCO has floated tenders for preparing master plan for a 2000 Acre Global City at Maduranthakam Chengalpattu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com