நாகையில் விஜய் பிரசாரம்: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் நாளை மேற்கொள்ளவுள்ள பிரசாரத்துக்கு காவல்துறை நிபந்தனை
நாகையில் விஜய் பிரசாரம்: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பிரசாரத்துக்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (செப். 20) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள பிரசாரத்தின்போது, காவல்துறையினரின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

புத்தூர் அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொள்ள அனுமதியளித்துள்ள காவல்துறை, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.

  • பரப்புரையில் நண்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.

  • கட்சித் தலைவர் விஜய் செல்லும் பகுதியில், 2 பிரதான கட்சிகள் இருப்பதால், பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு தன்னார்வலர்களை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • ரவுண்டானா பகுதியானது, தமிழ்நாடு - புதுவை எல்லை என்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக் கூடாது.

  • விஜய்யின் பரப்புரை வாகனத்தின் பின்னே 5 வாகனங்களுக்குமேல் செல்லக் கூடாது.

  • பரப்புரைக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியை தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

  • பெண்கள் மற்றும் பெரியவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

  • அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது. சேதம் ஏற்பட்டால், கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும் உள்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய் செல்லவிருக்கும் வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்யுமாறு மின் பொறியாளர் அலுவலகத்தில் தவெகவின் நாகை மாவட்டச் செயலாளர் மனு அளித்துள்ளார்.

அதன்படி, விஜய் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யயுள்ள புத்தூர் அண்ணா சிலை அருகில் வருகைபுரிந்து மக்களை சந்தித்து உரையாற்றயுள்ளார்.

இவ்வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும்வரை அவ்வழியில் உள்ள வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Summary

Conditions for TVK Vijay's Campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com