கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை: அமைச்சர் சேகர்பாபு

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்.
கோயம்பேடு சந்தை - கோப்புப்படம்
கோயம்பேடு சந்தை - கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கோயம்பேடு மார்க்கெட்டில் செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்புச் சந்தை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

மேலும், வரும் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அதிகம் இடங்கள் கேட்போம் என்று கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, இந்த இயக்கத்தின் மூலவர், உற்சவர் எல்லாமே முதலமைச்சர் தான். இது போன்ற சூழல்களுக்கு உண்டான தீர்வை அவர் காண்பார்.

இந்த ஆட்சி ஆத்திகர்களாலும் நாத்திகர்களாலும் கொண்டாடப்படக் கூடிய ஆட்சியாக விளங்குகிறது. அந்த இயக்கத்தாலே ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றவர்கள் இவ்வாறு பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள சேவையை தொடங்கி வைத்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படும் கோயம்பேடு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக இணையதளம் இன்றைக்கு துவங்கியுள்ளோம். இந்த இணையதளத்தின் வழியாக, 3000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள இந்த அமைப்பில் பராமரிப்புக் கட்டணம், விலைகள் நிர்ணயம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வருகிற 25 தொடங்கி 5 ஆம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்புச் சந்தை நடைபெறும்.

கோயம்பேடு சந்தைப் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பிலும், மெட்ரோ ரயில் பணிகளையும் ஆயுத பூஜை திருவிழா காலத்தில் ஐந்து நாள்கள் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூன்றாவது பெருந்திட்ட வரைவுத் திட்டம் இந்தாண்டு இறுதி அல்லது தை மாதம் முதல் நாள் வெளியிடப்படும். முதலமைச்சர் இந்த பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார், அந்த வகையில் இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தை மாதம் வெளியிடப்படும்.

கோயம்பேடு சந்தையை மேம்படுத்த மழைநீர் கால்வாய், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்பேடுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கழிவறைகளும் இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சுத்தமான அங்காடியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கடந்த காலத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக நிதி செலவிடப்படவில்லை.

2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அதிகம் இடங்கள் கேட்போம் என்று கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு,

இந்த இயக்கத்தின் மூலவர், உற்சவர் எல்லாமே முதலமைச்சர்தான். இது போன்ற சூழல்களுக்கு உண்டான தீர்வை அவர் காண்பார்.

அண்ணாமலை முதலமைச்சரை விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு, இந்த ஆட்சி ஆத்திகர்களாலும் நாத்திகர்களாலும் கொண்டாடப்பட கூடிய ஆட்சியாக விளங்குகிறது. அந்த இயக்கத்தாலே ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றவர்கள் இவ்வாறு பேசுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை என்று பதிலளித்தார்.

Summary

Minister Shekar Babu has announced that a special Ayudha Puja market will be held at Koyambedu Market from September 25 to October 5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com