
சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதுமே சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் சோதனைக்குப் பின்னர் அவை புரளி என தெரிய வருகிறது.
சென்னையிலும் உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு கடந்த வாரங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல்(அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகத்திற்கு இன்று(செவ்வாய்க்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பெண்கள் இரவில் தனித்துப் பயணமா? கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.