
கரூரில் நேர்ந்த துயரமான சம்பவம் வேதனை அளிப்பதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் துயர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கரூர் சம்பவம் குறித்து தில்லி முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''கரூரில் நடந்த துயரமான சம்பவம் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமை கொடுக்கவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
40 பேர் பலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு கூட்டம் அலைமோதியது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலுமொருவர் இன்று பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிகை 40 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கரூர் பலி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் - ஆட்சியர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.