கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கரூர் பலி சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை.
விஜய்
விஜய்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று(செப். 29) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கரூர் சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமை இரவு முதல், கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், இன்று காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து, இன்று மாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு விஜய் செல்லவுள்ளார்.

அங்கு, தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

கரூர் சம்பவம் நடைபெற்று முதல்முறையாக விஜய் தவெக தலைமை அலுவலகம் செல்லவுள்ளது அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

Summary

The Tvk leader will hold consultations today (Sept. 29) regarding the incident in which 41 people died in a stampede at Vijay's campaign rally in Karur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com