கரூர் பலி: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் விசாரணைக் குழு

கரூர் பலி சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஹேமமாலினி தலைமையில் எம்.பி.க்கள் குழுவை தேசிய ஜனநாயகக் கூட்டணி நியமித்துள்ளது.
கரூர் பலி: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் விசாரணைக் குழு
Updated on
1 min read

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் குழு அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவிட்டுள்ளது.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க எம்.பி. ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு அமைத்துள்ளது.

ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த எம்.பி.க்கள் குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இந்தக் குழுவினர், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து, விசாரித்து அறிக்கை அளிக்கவுள்ளனர்.

இதையும் படிக்க: கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Summary

TVK Vijay Rally Stampede: Hema Malini, Anurag Thakur, Tejasvi Surya, others in NDA probe panel to visit Karur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com