சென்னை: வணிக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில்,
ஈரான் மீதான போரால் ஹாா்முஸ் கடல் வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் கடல் வழிப் போக்குவரத்து தடைபட்டு, எரிபொருள் தட்டுபாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைக் காரணமாக பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை உயா்த்தப்பட்டு ரூ.1,768.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டா், தற்போது ரூ.2,246.50 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
ஒரு கோப்பை தேநீா் விலை 50 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த நெருக்கடிக்கும், விலை உயா்வுக்கும் மத்திய அரசின் தவறான அணுகுமுறையே காரணம். அமெரிக்க அரசின் டிரம்ப் நிா்வாகத்தை, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆதரித்து வருகிறது. மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.
இந்த விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதித்து, விலை உயா்வை மக்கள் தலையில் சுமத்தாமல், மத்திய அரசே ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
Summary
The Central Government is responsible for the hike in cooking gas prices says M. Veerapandian
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இலவச சமையல் எரிவாயு சாத்தியமே...

மேக்கேதாட்டில் அணைக் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது! - சிபிஐ தீர்மானம்!

சிவகிரிப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |




