வணிக சிலிண்டர் விலை உயர்வு!
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து...

வணிக சிலிண்டர் - கோப்புப்படம்
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 11 உயர்த்தப்பட்டு ரூ. 3,016.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டர், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை இன்று (நவ. 1) மாற்றியமைத்தன.
இதன்படி, வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 11 உயர்த்தப்பட்டு ரூ. 3,016.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 957.50 ஆக விற்பனையாகிறது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் நாணயத்தின் மாற்று விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The price of a 19 kg commercial cooking gas cylinder, used in hotels and restaurants, has been increased by Rs. 11, and it is now being sold for Rs. 3,016.50.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


