சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

செண்டுமல்லி பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

கெங்கவல்லி பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த செண்டுமல்லி பூவின் விலை உயர்வு குறித்து...

Price of jasmine flowers increases: Farmers happy...

கெங்கவல்லி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செண்டுமல்லி பூ - டிஎன்எஸ்

Updated On :

சேலம்: பண்டிகை நாள்களை எதிர்நோக்கி கெங்கவல்லி பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த செண்டுமல்லி பூவின் விலை கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூடமலை, செந்தாரப்பட்டி, உலிபுரம், தம்மம்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் செண்டுமல்லி பூக்களைப் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் விளையும் பூக்கள் உள்ளூர் சந்தைகளுக்கும், அருகிலுள்ள பூ விற்பனைச் சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் பூஜை செய்வதற்காகவும், அலங்காரத்திற்காகவும் செண்டுமல்லி பூக்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

இதற்கிடையே, பருவமழை போதிய அளவில் பெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்தும் குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்திருப்பதால் செண்டுமல்லி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

தற்போது செண்டுமல்லி கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Price of jasmine flowers increases: Farmers happy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.