ஆயுத பூஜை! பூக்களின் விலை கடும் உயர்வு! கனகாம்பரம் கிலோ ரூ. 2,000!
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது குறித்து....

தஞ்சாவூர் பூச்சந்தை
ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் பூக்காரத் தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குத் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லாரிகளில் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.
இந்த நிலையில், நாளை மறுநாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கனகாம்பரம் பூ பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையாகின.
இதேபோல் முல்லை ரூ. 1100, செவ்வந்தி ரூ. 300, ஆப்பிள் ரோஸ் ரூ. 300, சம்பங்கி ரூ. 300, பன்னீர் ரோஸ் ரூ. 200, அரளி ரூ. 500, கோழி கொண்டை ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாளை இதைவிடப் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

