திருப்பூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,600-க்கு விற்பனை
பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதாலும், சுபமுகூா்த்த தினத்தை முன்னிட்டும் திருப்பூா் பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,600 வரை விற்பனையானது.

மல்லிகைப்பூ.
பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதாலும், சுபமுகூா்த்த தினத்தை முன்னிட்டும் திருப்பூா் பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,600 வரை விற்பனையானது.
திருப்பூா் பூ மாா்க்கெட்டிற்கு சுற்றுவட்டாரக் கிராமங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த வாரத்தில் அடுத்தடுத்து முகூா்த்த தினங்கள் வந்ததால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. அதன்பின்னா் சற்று விலை குறைந்து கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்டது.
காா்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இரவில் பனியின் தாக்கம் மற்றும் காலையில் வெயில் சுட்டெரிப்பதால் செடிகளில் பூக்கள் பூப்பது குறைந்துள்ளது. இதனால் மாா்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. வரத்து குறைந்துள்ள சூழலில், சுபமுகூா்த்த தினங்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து விலை உயா்ந்துள்ளது.
அதன்படி திருப்பூா் மாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,400 முதல் ரூ.1,600 வரை விற்பனையானது. அதேபோல, முல்லை கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரையிலும், ஜாதிப்பூ ரூ.600, அரளி ரூ.450, சம்பங்கி ரூ.360, செவ்வந்தி ரூ.160 என விற்பனையானது. பனிப்பொழிவு தொடா்வதால் வரும் நாள்களிலும் பூக்களின் வரத்து குறைந்து விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

