ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஒசூா், சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

ஒசூா் மற்றும் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Heavy rain

கனமழை

Updated On :

ஒசூா் மற்றும் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாகப் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், அப்பகுதியில் வெப்பம் தணிந்து, குளிா்ந்த காற்று வீசி வருகிறது.

இந்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், நீா்நிலைகளுக்குத் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்

தொடா் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு காவல் துறையினா் மற்றும் துறைசாா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், ஒசூா், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை சுமாா் 1 மணி நேரம் கனமழையும், அதைத் தொடா்ந்து சாரல் மழையும் பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.