காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை! மகிழ்ச்சியில் மக்கள்!

காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவது தொடர்பாக...

rain

கனமழை - படம்: தினமணி

Published On :

காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. நீண்ட நாள்களாக மழையை எதிர்பார்த்திருந்த மக்கள், கனமழை பெய்ததால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கடும் வெய்யில் வாட்டி வந்த நிலையில், ஏரிகளின் நீர் இருப்பு குறைந்து கொண்டே இருந்தது.

பல்வேறு மழை குறித்த அறிவிப்புகள் வெளியானலும், போதிய மழை இல்லை என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கவலையில் இருந்த நிலையில், இன்று(அக் . 8) பகலில் திடீரென கருமேகம் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

பின்னர், சில மணித்துளிகளிலே, காஞ்சிபுரம் நகரம், வாலாஜாபாத், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை என பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

கனமழை பெய்து வானிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழையானது நீர் இருப்பை அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Summary

Heavy rain has been falling for the past few hours in Kanchipuram, Walajabad, and surrounding areas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.