உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

சென்னைக்கு மழைக்கான நேரம் வரும்! வந்தால் வலுவாக இருக்கும்!

சென்னையில் மழை எப்போது? - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.

rain

மழை - பிரதிப் படம்

Published On :

சென்னைக்கு மழைக்கான நேரம் கூடிய விரைவில் வரும் என்றும், வரும் சமயத்தில் வலுவானதாக இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

”சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மழை பெய்வதற்கான நேரம் நிச்சயம் வரும். அதுவரும்போது, வலுவானதாக இருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கான முறை வரும்.

பருவநிலை மாற்றத்தின் இந்தக் காலகட்டத்தில் பெய்யும் மழையை , தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு, தெற்கு மாவட்டங்கள் அனுபவிக்கட்டும். அவர்கள் இந்த மழையைப் பெறத் தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

சுமார் 0.9 கி.மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று(அக். 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Private weather blogger Pradeep John has stated that the time for rain in Chennai will arrive very soon and that it will be intense when it does.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.