சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் உள்பட 9 பேருக்கு மரண தண்டனை விதித்த மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், இருக்கையிலிருந்து எழும் முன்பாக தனது பேனா முனையை மேஜையில் குத்தி உடைத்தார்.
தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிஸ் (31) ஆகியோர், கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கக் காலத்தில், இரவில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி, காவலர்கள் அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதில், இவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விவரத்தை வெளியிட்ட நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்கு என்று குறிப்பிட்டதோடு, வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.
கொலை செய்யும் நோக்கம் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தந்தை, மகன் ஆகிய இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே இரவு முழுவதும் வைத்துத் தாக்கியிருக்கிறார்கள். குற்றவாளிகள் வாழத் தகுதியில்லாதவர்கள் என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே. குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண் தண்டனை வழங்கப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ஒரு கோடியே நாற்பதாயிரம் ரூபாயை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பளித்த பிறகு, இருக்கையிலிருந்து எழுவதற்கு முன்பு, தீர்ப்பளித்த பேனாவின் முனையை, மேஜை மீது குத்தி உடைத்தார் நீதிபதி. இந்த நடைமுறை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதலே, இருந்து வருகிறது.
அதாவது, நீதிமன்றங்களில் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நீதிபதிகள் பேனாவின் முனையை உடைப்பது ஒரு வழக்கம். இந்த வழக்கத்தின் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன.
பேனாவின் முனையை உடைப்பதை ஒரு குறியீட்டு அர்த்தம் என்று வைத்துக்கொண்டால், மரண தண்டனையை விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பேனா, இனி ஒருபோதும் அதுபோன்ற தண்டனையை விதிக்கப் பயன்படுத்தப்படாது என்பதை குறியீடாகச் சொல்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கலாம்.
அதாவது, நமது நாட்டில் மரண தண்டனை என்பது, குற்றவாளி திருந்தி வாழ வழி இல்லாதபோது, குற்றம் மிகக் கொடூரமாக இருந்து, மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வண்டும் என்று, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அளிக்கப்படும் உச்சபட்ச தண்டனை.
அர்த்தம் என்ன? ஒரு தீர்ப்பு எழுத்துப்பூர்வமாக எழுதப்பட்டு, கையெழுத்திடப்பட்டவுடன், நீதிபதிகளால் அதை மறுபரிசீலனை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது. எனவே, நீதிபதி அல்லது நீதிபதிகள் தங்களது தீர்ப்பு குறித்து மாற்று சிந்தனைகள் கொள்வதைத் தடுக்கவே பேனா முனை உடைக்கப்படுகிறது.
அடுத்து, மரண தண்டனை விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பேனா வேறு ஒரு வேலைக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு காரணமாகக் கொள்ளப்படுகிறது.
மற்றொன்று, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி, அந்த தீர்ப்பினை அளித்த பேனாவின் முனையை உடைப்பதன் மூலம், தீர்ப்புக்கான பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒரு மனப்பாங்கை உருவாக்கும்.
மரண தண்டனை வழங்கிய பேனாவின் முனையை உடைப்பதன் மூலம், அந்த நினைவு அதனோடு அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Summary
What is the meaning of the pen nib being broken after the verdict in the Sathankulam case?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸாா் மேல் முறையீடு செய்ய மீண்டும் கால அவகாசம்
சாத்தான்குளம் வழக்கு: மூச்சுத் திணறி இறந்ததாக பேசியோருக்கு தண்டனை வழங்குக - கமல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




