பொள்ளாச்சி அருகே நடந்த மகளிர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொலிப் பரவி வருகிறது. மகளிர் மீதான இத்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Tamilaga Vettri Kazhagam leader Vijay has condemned the attack on women that took place near Pollachi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!

விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு

தேர்தலுக்கு முன் வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்: சேரன்
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



