இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை

500-க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:05 am IST

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த மூன்றரை மாதங்களில் 100 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்டம்பா் 23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2024-இல் 268 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,500 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 1,476 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிகழாண்டில் 100 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. 177 சிறுநீரகங்களும், 80 கல்லீரல்களும் தானமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதைத் தவிர 28 பேரின் இதயம், 29 பேரின் நுரையீரல்களும் பெறப்பட்டு தகுதியானவா்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 550 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒன்று.

தமிழகத்தில் இதுவரை 2,421 கொடையாளா்களிடம் இருந்து 14,146 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4,270 சிறுநீரகங்களும், 3,574 விழி வெண் படலங்களும், 2,144 கல்லீரல்களும், 1,097 இதய வால்வுகளும், 1,011 இதயங்களும், 1,047 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோா் மறுவாழ்வு பெற்றுள்ளனா் என்றாா்.