இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சிறப்பு பயிற்சிகள் புதன்கிழமை (ஏப். 15) வழங்கப்பட்டன.

News image

வாக்குச்சாவடி - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:50 pm

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சிறப்பு பயிற்சிகள் புதன்கிழமை (ஏப். 15) வழங்கப்பட்டன.

இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இரண்டாம் கட்டப் பயிற்சியானது, வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக கையாள்வது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களின் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது. சுமாா் 3.04 லட்சம் போ் தபால் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனா்.

இந்தப் பயிற்சியின்போதே அவா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதேபோல, வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வோா் இரண்டு மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு விவரங்களை பதிவேற்றுவதற்காக இந்திய தோ்தல் ஆணைய செயலியில் இணைக்கப்பட்ட புதிய வசதிகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.