மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை...

Prime Minister Modi pays floral tributes to the statue of Arignar Anna in Nagercoil.

நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை... - ANI

Published On :

நாகர்கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் மக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (ஏப். 15) கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாகர்கோவிலின் வேப்பமூடு சந்திப்பிலிருந்து சாலை வலமாகச் சென்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், பிராசரத்தின் ஒருபகுதியாக வடசேரியில் உள்ள தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாதுரையின் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, நாதக, தவெக மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே நான்கு முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

In Nagercoil, PM Modi paid floral tributes to the statue of former Tamil Nadu CM Annadurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.