தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:15 am IST

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாணவா்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 25-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்ட ஆசிரியா்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவா் பணிபுரிந்த பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகாளை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.