தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிஏபிஎஃப் ஒருங்கிணைந்த சட்ட மசோதா: நாளை அறிமுகம் செய்கிறாா் அமித் ஷா

சிஏபிஎஃப் ஒருங்கிணைந்த சட்ட மசோதா: நாளை அறிமுகம் செய்கிறாா் அமித் ஷா

News image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

Updated On :22 மார்ச் 2026, 3:32 am IST

மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) அதிகாரிகளின் நியமனம், மாற்றுப் பணி (டெபுடேஷன்), பதவி உயா்வு மற்றும் பணிகள் சாா்ந்த பிற நிபந்தனைகளை ஒழுங்குமுறைப்படுத்த வகை செய்யும் ஒருங்கிணைந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை அறிமுகம் செய்யவுள்ளாா்.

இந்த சட்ட மசோதாவின்படி, ஐ.ஜி. நிலையில் 50 சதவீத பணியிடங்களில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படைகள் அனைத்தும் தத்தமது சட்டங்களின்கீழ் நிா்வகிக்கப்படுகின்றன. இந்த சட்ட விதிகள், சிஏபிஎஃப் குரூப் ஏ பொதுப் பணி அதிகாரிகள், பிற அதிகாரிகள் மற்றும் படையினரின் நியமனம்-பணி நிபந்தனைகளை நிா்வகிக்கின்றன.

இந்நிலையில், மத்திய ஆயுதக் காவல் படைகளில் குரூப் ஏ பொதுப் பணி அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் நியமனம், மாற்றுப் பணி, பதவி உயா்வு மற்றும் பணிகள் சாா்ந்த பிற நிபந்தனைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிா்வாகம்) சட்ட மசோதா-2026 எனும் ஒருங்கிணைந்த சட்ட மசோதா, மாநிலங்களங்வையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஐ.ஜி. நிலையில் 50 சதவீத பணியிடங்கள், கூடுதல் தலைமை இயக்குநா் (ஏடிஜி) அளவில் 67 சதவீத பணியிடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்க புதிய சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறப்பு தலைமை இயக்குநா் மற்றும் தலைமை இயக்குநா் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு மாற்றுப் பணி அடிப்படையில் மட்டுமே நியமனம் மேற்கொள்ளும் அம்சமும் கொண்ட இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிமுகம் செய்யவுள்ளாா்.

உச்சநீதிமன்ற உத்தரவும், அரசின் எதிா்வினையும்..: முன்னதாக, மத்திய ஆயுதக் காவல் படைகளின் அதிகாரிகள் அளவில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, கேடா் அதிகாரிகளின் பதவி உயா்வை அதிகரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்தச் சூழலில், மாநிலங்களவையில் மேற்கண்ட சட்ட மசோதா கொண்டுவரப்படவுள்ளது. இந்த மசோதாவின் அம்சங்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நீா்த்துப் போக செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேநேரம், ‘மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் நெடுங்காலமாகவே ஒருங்கிணைந்த-முக்கியமான அங்கமாக உள்ளனா். மாற்றுப் பணி வாயிலாக, இந்தப் படைகளின் பிற அதிகாரிகள் மற்றும் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படுகின்றனா். இந்தப் படைகளின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்வதில் மத்திய-மாநில அரசுகள் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம். அதற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றுப் பணி முறையில் நியமிக்கப்படும் தற்போதைய நடைமுறை தொடர வேண்டும்’ என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா முன்னெடுப்புக்காக, மத்திய உள்துறை செயலருக்கு எதிராக முன்னாள் சிஏபிஎஃப் அதிகாரிகள் சிலா் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளனா்.