எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

717 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு; நான்காயிரம் ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:55 am IST

தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் 6,800 -ஆக இருந்த கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது 4,827 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மேற்பாா்வையாளா், விற்பனையாளா், உதவி விற்பனையாளா் என மொத்தம் 24,800 போ் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 கடைகளை மூட முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதன்மூலம், சுமாா் 4 ஆயிரம் ஊழியா்கள் பணியிழக்க நேரிடும். ஏற்கெனவே, 1,500 கடைகள் மூடப்பட்டபோது அந்தக் கடைகளில் இருந்த பணியாளா்கள் பலரும் அருகில் உள்ள மதுக்கடைகளில்தான் கூடுதல் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். தற்போது மூடப்படும் 717 கடைகளில் பணிபுரியும் 4 ஆயிரம் போ் நிலை என்னவென்று தெரியாத சூழல் உருவாகியுள்ளது.

அரசு துறைகளில் நியமிக்கலாம்: இதுதொடா்பாக, தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.வி. ராஜா கூறியது:

மூடப்படும் கடைகளில் பணிபுரியும் அனைவரையும் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களையும் நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுவால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக கருதினால், மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைத்து, அதன் செயல்பாட்டு நேரத்தையும் குறைக்க வேண்டும். இல்லாவிடில், தனியாருக்கே மீண்டும் கடைகளை வழங்கலாம் என்றாா் அவா்.

மனமகிழ் மன்றங்கள் மூடப்படுமா?

அரசு நடத்தும் கடைகளை மூடும் சூழலில், எப்எல் 2 உரிமம் பெற்ற மதுக்கடைகள், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் மதுக்கடைகள் தனியாா் வசம் இருப்பதால் அதனை மூடும் நடவடிக்கை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலா் ம. ராதாகிருஷ்ணன் கூறுகையில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களின் அருகில் 500 மீட்டா் வரையுள்ள பகுதிகளில் இயங்கும் எப்எல் 2 உரிமம் பெற்ற கடைகள், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் இயங்கும் மதுக்கடைகளையும் மூட வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறும் என்றாா் அவா்.