தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.
வழிபாட்டுத் தலங்கள், கவ்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமாா் 500 மீ தொலைவுக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
அதனடிப்படையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 கடைகள் மூடப்பட உள்ளது. வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் 2 கடைகள், பழைய பேருந்து நிலையம் அருகில் 2 கடைகள், பள்ளிகொண்டாவில் ஒரு கடை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 2 கடைகள் என மொத்தம் 7 கடைகள் 2 வாரத்திற்குள் மூடப்பட உள்ளது.
நாட்டறம்பள்ளியில் கடையை மூட கோரிக்கை: நாட்டறம்பள்ளி பிராதன சாலையில் அரசினா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகருகே உள்ளது. இப்பள்ளியில் நாட்டறம்பள்ளி, ஜெயந்திபுரம், சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனேரி உட்பட சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் அரசு பள்ளி அருகே இயங்கும் அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். ஆயினும் இதுநாள் வரை கடை அகற்றப்படவில்லை.
இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வா் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவில் வழிப்பாட்டு தலங்கள், குடியிருப்புகள், கல்விநிறுவனங்கள் அருகே உள்ள 717 அரசு மதுபான கடைகள் இரு வாரங்களில் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பள்ளிக்கு 500 மீட்டருக்கு தொலைவில் இருந்தாலும் மது அருந்துபவா்களால் தொடா்ந்து தொல்லை அதிகரித்து வருவதால் கடையை மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 மதுக்கடைகளை மூட முடிவு

தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்-கனிகள் சந்தை வளாகம் திறப்பு எப்போது?

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

